வித்தியாசமான கொண்டாட்டங்கள் கொண்ட தீபாவளி பண்டிகை :


Posted by-Kalki Teamஉலகம் முழுவதும் இந்திய மக்களாலும், பிறநாட்டு மக்களாலும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது

உலகம் முழுவதும் இந்திய மக்களாலும், பிறநாட்டு மக்களாலும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்றும் அதற்கு முன்னரும் பின்னரும் என பல நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பல விதமாய் கொண்டாடி மகிழப்படுகிறது. இறைவனை இனிய பூஜை விதிகள் முதற்கொண்டு மகிழ்ச்சி திளைப்போடு உறவினருடன் கொண்டாட்டம் வரையில் அனைத்தும் மிக மிக வித்தியாசமானவை.

மகாராஷ்டிராவில் 5 நாட்கள் தீபாவளி

தமிழகத்தில் ஒருநாள் அல்லது இருநாள் என்றவாறு தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால் மஹாராஷ்டிரா மற்றும் பிற வடமாநிலங்களில் 4 முதல் 5 நாட்கள் வரை தீபாவளி கொண்ட்டம் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் முதல் நாள் தந்தராஸ் என்றவாறு தன்வந்திரி பகவான் வணங்குவது, இரண்டாம் நாள் நகர சதுர்த்தி, மூன்றுாம் தீபாவளி, நான்காம் நாள் கெளரி விரதம், ஐந்தாம் நாள் பாவிபீஜ் என்றவாறு சகோதர சகோதரிகளுக்கான பண்டிகை என்றவாறு கொண்டாடுகின்றனர்.

இந்த நாட்களில் தன்வந்திரி பூஜை, லட்சுமி குபேர பூஜை, பார்வதி தேவியை வணங்கும் கேதார விரத பூஜை போன்றவை பக்தி சிரத்தையும் இல்லங்களில் நடத்தப்படுகிறது.

அதன் காரணமாய் கோவர்த்தன கிரியை தீபாவளியன்று வணங்கி தீபாவளியை கொண்டாடுவர். அன்றைய தினம் 56 வகையான உணவுப் பொருட்களை கொண்டு பெரிய அன்ன குவியலை கோவர்த்தன கிரிக்கு படையலிட்டு வணங்கி மகிழ்வர்.

வித்தியாசமான பூஜைகளாய் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் :

பீகார் மாநிலத்தில் தீபாவளியை கொண்டாடும் முன் ஒரு மரக்கொம்பில் துணியை சுற்றி பெரிய பந்தம் போல் ஏற்றி வாசலில் நின்று வெளியே தூக்கி எறிவர். அதன் பின் அழகி விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி தீபாவளியை கொண்டாடுவர். அதாவது மூதேவியை வீட்டில் இருந்து துரத்தி விட்டு மகாலட்சுமியை இல்லம் அழைத்து வருகின்றனராம்.

கங்கை நதியில் வணங்கி நீராடுவது போன்று தீபாவளியன்று யமுனை நதியிலும் நீராடலாம். யமுனோத்ரியில் உள்ள கோவிலில் யமுனாதேவிக்கு பூஜைகள் செய்யப்படும். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை, ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு, மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள், வங்காளத்தில் காளி பூஜை என்றவாறு வித்தியாசமான திருவிழாக்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.Post Comment

Post Comment