கபாலி 2... அப்பா படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா தனுஷ் :


Posted by-Kalki Teamசென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்கவுள்ள புதிய படத்தில், ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிகையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம். இப்பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை தனுஷ் தனது ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார். தற்போது இப்பட வேலைகளில் ரஞ்சித் தீவிரமாக உள்ளார்.

இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார்.

இப்படம் முடிவடைந்ததும் அவர் ரஞ்சித் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தையும், கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஆனால், இதுவரை அவர் எந்த படத்திலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment