நவராத்திரி வழிபாடும் சிறப்பான பலன்களும் :


Posted by-Kalki Teamநவராத்திரி கன்னி பெண்களை கவுரவித்து அவர்களுக்கு புதிய ஆடை பரிசளிப்பது பெரும்பலனை அளிக்கும். அதுபோல் நவராத்திரியில் குழந்தை வடிவமாய் அருள் புரியும் அம்பிகை அவள் கொலுவிற்றிருக்கும் கொலுவை காண குழந்தைகளை தன் வசம் இழுக்கிறாள். வரும் குழன்தைகளை ஒவ்வொரு தெய்வமாக மதித்து உபசரித்து அனுப்புதல் வேண்டும்.

நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.

* நவராத்திரி நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவியை வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

* நவராத்திரி தினங்களில் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

* நவராத்திரி தினங்களில் பகல் பொழுதில் சிவபெருமானை வணங்கி ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெயித்தால் அளவில்லா பலன்கள் கிட்டும்.

* அம்பிகை இசை பிரியை. எனவே தினமும் அம்பிகையை ஒரு பாட்டாவது பாடி வணங்குதல் வேண்டும்.

* நவராத்திரி ஒன்பது தினங்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினம். அன்றைய தினம் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுபாவாடை தானம் செய்வது நல்லது.

* நவராத்திரி நாளில் சப்தமி திதியன்று ஹயகிரிவிரை வணங்குதல் வேண்டும்.

* விஜய தசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தடியில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்வார்கள். அதில் கலந்து கொண்டு வழிபட்டால் கிரக தோஷம் விலகி விடும்.Post Comment

Post Comment