அஷ்டமி, நவமியில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம் :


Posted by-Kalki Teamஅஷ்டமி மற்றும் நவமி அன்று செய்ய வேண்டிய அற்புத பரிகாரம், செய்யக்கூடாதனை என்னவென்று பார்க்கலாம்.

அஷ்டமி அன்று....

அன்றைய தினம் மருத்துவம் தொடர்பான எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நன்று. ஏனெனில் இந்த நாளில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை மேற்கொண்டால் தொடர்ந்து மருத்துவனை செல்ல வேண்டிய நிலை ஏற்படும். முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். மேலும் பிரத்தியங்கரா தேவி, துர்கை அல்லது வாராஹி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த தினம்.

நவமி அன்று ....

இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க, நமக்கு வெற்றி நிச்சயம். மேலும் இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்தும் சுபமாக முடியும். நாள் இனிமை சேர்க்கும்.


Post Comment

Post Comment