நோய் எதிர்ப்பு சக்தி தரும் திப்பிலி ரசம் ;


Posted by-Kalki Team



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி. திப்பிலி கொண்டு தயாரிக்கப்படும் ரசம் உடலுக்கும் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :

அரிசி திப்பிலி - 10,

கண்டதிப்பிலி - சிறிதளவு,

மிளகு - 10,

காய்ந்த மிளகாய் - ஒன்று,

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,

சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

* அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.

-இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை events@kalkiweekly.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


Post Comment

Post Comment