கோபத்தை கட்டுப்படுத்தும் க்யான் முத்திரை :


Posted by-Kalki Teamதினமும் அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்தலாம்.

செய்முறை :

அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். விரிப்பில் பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது.

ஆள்காட்டி விரலால் கட்டை விரலை தொட வேண்டும். இந்த நிலையில் ஆரம்பத்தில் 20 நிமிடமும், போகப்போக நேரத்தில் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பயன்கள் :

இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.


Post Comment

Post Comment