வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்வது எப்படி.??


Posted by-Kalki Team



பொதுவாக மூக்குக் கண்ணாடிகளை வாங்கும் போது வழங்கப்படும் மைக்ரோஃபைபர் அல்லது கட்டற்ற பஞ்சு துணியை கொண்டு ஸ்மார்ட்போன்களை மென்மையாகத் துடைக்கலாம். இவை கருவியில் இருக்கும் கைரேகை மற்றும் தூசிகளை நீக்க உதவும். துணியில் சிறிதளவு நீர்த் துளி விட்டுத் துடைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காது குடையும் சிறிய சிறிய பஞ்சு உருண்டைகளை (காட்டன் பட்ஸ்) கொண்டும் போனில் இருக்கும் தூசிகளை அகற்ற முடியும். கருவியின் இடுக்குகளில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை நீக்க இவை பேருதவியாக இருக்கும்.

சிலர் ஸ்மார்ட்போன்களில் மதுபானம், அமோனியா போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் சிலர் பயன்படுத்தலாம் என்றும் கூறுவர். ஆனால் உங்களது சொந்த விருப்பத்தில் சிறிதளவு மதுபானத்தை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது 30 முதல் 40 சதவீதம் மதுவுடன் 70 முதல் 60 சதவீதம் தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டும். இவை கருவியில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவும்.

மதுபானத்தை பயன்படுத்த தயக்கமாக இருந்தால் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். சம பங்கு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை நன்கு கலந்து மென்மையான பஞ்சு துணியின் மூலம் கருவியில் இருக்கும் கிருமிகளை அழித்து கருவியை சுத்தம் செய்யலாம்.

சந்தையில் கிடைக்கும் சுத்திகரிப்பான்களை கொண்டும் கருவிகளின் அழுக்குகளை நீக்க முடியும். சுத்தமான பஞ்சு துணியில் சிறிதளவு சுத்திகரிப்பான் எடுத்து கருவியை மென்மையாகத் துடைத்தால் கருவியில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு கருவி சுத்தமாகிடும்.


Post Comment

Post Comment