இந்த வார விசேஷங்கள் :


Posted by-Kalki Team20–9–2016 முதல் 26–9–2016 வரை

20–ந் தேதி (செவ்வாய்)

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

இன்று புண்ணிய தல யாத்திரை, பிதுர் கடன் இயற்றுதல், அன்னதானம் வழங்குவது நல்லது.

கீழ்நோக்கு நாள்.

21–ந் தேதி (புதன்)

கார்த்திகை விரதம்.

திருப்பதி ஏழுமலையப்பன் சகசரகலசாபிஷேகம்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

22–ந் தேதி (வியாழன்)

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

23–ந் தேதி (வெள்ளி)

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்படம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி வருதல்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு 8–வது நாள் விழா. மாலையில் இனிப்பு பலகாரங்களுடன் திருக்கல்யாண சுருள் பதிவலம் வருதல்.

சமநோக்கு நாள்.

24–ந் தேதி (சனி)

ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

இன்று விஷ்ணு ஆலயங்களில் வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

மேல்நோக்கு நாள்.

25–ந் தேதி (ஞாயிறு)

பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.

கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு 10–வது நாள் விழா. இரவில் இந்திர விமான வாகனத்தில் அய்யா நகர் வலம் வருதல்.

சமநோக்கு நாள்.

26–ந் தேதி (திங்கள்)

சுமார்த்த ஏகாதசி.

முகூர்த்த நாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

திருமயம் சத்தியமூர்த்தி பவனி.Post Comment

Post Comment