சிந்தெட்டிக் ஆயில் Vs சாதாரண ஆயில்: காருக்கு சிறந்தது எது?


Posted by-Kalki Teamகார் சர்வீஸ் மையத்திற்கு முதல் சர்வீஸுக்கு செல்லும்போது, காருக்கு எந்த ஆயிலை மாற்றுவது என்று சூப்பர்வைசர் கேட்கிறார். சார், சாதாரண ஆயிலைவிட, கொஞ்சம் காஸ்ட்லியானாலும் சிந்தெடிக் ஆயில் போட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்.

கார் இன்ஸ்யூரன்ஸிலும் ரிலையன்ஸ் புரட்சி! இதனால், சிந்தெடிக் ஆயிலை போடுவதா அல்லது சாதாரண ஆயில் போடுவதா என்று பலருக்கும் குழப்பம் ஏற்படுவது இயற்கை. இந்த குழப்பத்திற்கு விடை கொடுக்கும் முயற்சியாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

முதலில் இரண்டு ஆயில்களுக்கான வித்தியாசத்தை தெரிந்து கொண்டு, சாதக, பாதகங்களை பார்க்கலாம். சாதாரண ஆயிலை மினரல் ஆயில் என்று குறிப்பிடுவர். அதாவது, கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் போன்றே பிரித்தெடுக்கப்படும் ஒரு உயவுப் பொருள்தான் இந்த மினரல் ஆயில்.

மினரல் ஆயில் என்பது சாதாரண பிரித்தெடுக்கும் முறையில் தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆயிலில் குறைந்த அளவிலான சல்பர் உள்ளிட்ட கசடுகள் இருக்கும். தற்போது இந்த ஆயில்தான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. மினரல் ஆயிலைவிட சற்று கூடுதல் தரம் கொண்டதாக செமி சிந்தெடிக் ஆயில் விற்கப்படுகிறது.

அதாவது, 70 சதவீதம் மினரல் ஆயில் மற்றும் 30 சதவீதம் சிந்தெடிக் ஆயில் கலவையில் இந்த ஆயில் தயாரிக்கப்படுகிறது. சிந்தெடிக் ஆயில் என்பது உயர் தர எஞ்சின் ஆயில். இது ரசாயன மதிப்புக்கூட்டு பொருட்களுடன் உயர் தர பிரித்தெடுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயில் எந்த ஒரு வெப்ப நிலையிலும், இதன் மூலக்கூறுகள் சமமான முறையிலேயே விரிவடையும், சுருங்கும். மேலும், கசடுகள் அற்றதாக இருக்கும். எனவே, உயர்தர வகையாக இருக்கிறது.

மினரல் ஆயிலின் முக்கிய பயன், சீரான எஞ்சின் இயக்கத்தின்போது சிறப்பான உயவுத் தன்மையை அளிக்கும். எனவே, சாதாரண கார்களுக்கும், நகர்ப்புறத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்களுக்கும் இந்த மினரல் ஆயில் போதுமானது. சிந்தெடிக் ஆயிலைவிட விலை மிகவும் குறைவு. அதேநேரத்தில், நீண்ட பயன்பாட்டின்போது எஞ்சினின் உள்பாகங்களில் கசடுகள் படிந்துவிடும்.

குளிர்ச்சியில் கெட்டித்தன்மை அதிகரிக்கும். சிந்தெடிக் ஆயிலுடன் ஒப்பிடும்போது, உயவுத்தன்மையை சீக்கிரமே இழக்கும் என்பதால், இந்த ஆயிலை சரியான இடைவெளியில் மாற்றுவது அவசியம். எஞ்சின் பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

அத்துடன், அதிக வெப்பநிலைகளில் தனது உயவுத்தன்மையை எளிதாக இழக்கும்.

மறுபுறத்தில் சிந்தெடிக் ஆயில் பல சிறப்புகளை கொண்டிருக்கிறது. இது உயர்தர ஆயில் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையிலும் அடர்த்தியையும், உயவுத் தன்மையையும் சீக்கிரமாக இழக்காது. எஞ்சின் பாகங்களுக்குள் எளிதாக விரவும், உராய்வும் குறைவாக இருக்கும்.

எனவே, நீண்ட தூர பயணங்கள் அடிக்கடி செல்லும் கார்களுக்கு இந்த சிந்தெடிக் ஆயில் சிறந்தது. எஞ்சினுக்குள் கசடு படியும் பிரச்னையும் இதில் இருக்காது. இதனால், மினரல் ஆயிலை விட நீண்ட ஆயுட்காலத்தை கொண்டிருக்கிறது.

இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமான சிறப்பம்சம் என்ன தெரியுமா? விபத்துக்களின்போது சிந்தெடிக் ஆயிலின் தீப்பற்றும் திறன் குறைவு. அதேசமயத்தில், சில குறைகளும் உண்டு.

மினரல் ஆயிலைவிட மூன்று மடங்கு வரை கூடுதல் விலை கொண்டது. நீண்ட காலம் இந்த ஆயிலை பயன்படுத்தும்போது, இதிலிருக்கும் மதிப்புக்கூட்டு பொருட்களால் ரப்பர் சீல்கள் பாதிப்பு ஏற்பட்டு, ஆயில் கசிவு பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, அதிக மைலேஜ் தரும் கார்களில் இந்த சிந்தெடிக் ஆயிலை நிரப்புவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், குறைந்த செயல்திறன் கொண்ட கார்களுக்கும் இந்த சிந்தெடிக் ஆயில் தேவையில்லை. எனவே, மினரல் ஆயிலே போதுமானது.

ஆஃப்ரோடு சாகசங்கள், அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்களுக்கும், அதிக செயல்திறன் கொண்ட கார்களுக்குமே இந்த சிந்தெடிக் ஆயில் பொருத்தமானது. மேலும், அடிக்கடி ஆயில் மாற்றும் பிரச்னையும் இல்லை என்பதால், நீண்ட கால அடிப்படையில் சேமிப்பான விஷயமாகவே இருக்கும்.

சரி, முடிவாக எது பெஸ்ட் என்று கேட்கிறீர்களா? இரண்டிலும் சிந்தெடிக் மிகச்சிறப்பானதாக இருக்கிறது. அதேநேரத்தில், கார் எஞ்சினின் பாகங்களை பாதிப்படையச் செய்யும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? எனவே, மினரல் ஆயிலையும், சிந்தெடிக் ஆயிலையும் மாற்று முறையில் பயன்படுத்துங்கள். இதுதான் தீர்வாக இருக்கும். ஏனெனில், தொடர்ந்து சிந்தெடிக் ஆயிலை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.Post Comment

Post Comment