பவர் பாண்டி - தனுஷ் இயக்கும் படம் ஆரம்பம் :


Posted by-Kalki Teamதுள்ளுவதோ இளமை படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அதன்பின், காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷின் உடல் வாகை பார்த்து, இவரெல்லாம் கதாநாயகனாக நடிக்க வந்து விட்டார் என, அப்போது பலர் கேலி செய்தனர். ஆனால் தன் மைனசை, பிளஸ் ஆக்கி, பல வெற்றிப் படங்களையும், தேசிய விருதையும் தனுஷ் தட்டிச் சென்றார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்தார். காக்க முட்டை படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.இதனிடையே நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகரைத் தொடர்ந்து தனுஷ் இயக்குநராக அவதரிக்கிறார் என்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

தான் இயக்கும் படத்திற்கு பவர் பாண்டி என்று பெயர் வைத்திருப்பதோடு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் தனுஷ். படத்தின் போஸ்டரே வித்தியாசமாக உள்ளது. பவர் பாண்டியில் நடிகர் ராஜ்கிரண் தான் ஹீரோ. ரோடு ரைடு செல்லும் இளைஞர்கள் போல் ராஜ்கிரண் உள்ளிட்ட வயதானவர்கள் போஸ் கொடுக்கிறார்கள்.

இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங் ஆகியோரும் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். இது எந்த மாதிரியான கதை என்று போக போகத்தான் தெரியும். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் இன்றே ஆரம்பித்துள்ளார்கள்.

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.பவர் பாண்டி படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷ் எழுதி, இயக்குவதுடன் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார்.


Post Comment

Post Comment