ஓணம் பண்டிகை தொடங்கியதை அடுத்து களைகட்டியுள்ள கேரளா :


Posted by-Kalki Teamதிரிசூர்: ஓணம் பண்டிகை தொடங்கியதை அடுத்து கேரளா களைகட்டியுள்ளது. மகாபலி மன்னன் தன் நாட்டு மக்கள் மீதுள்ள அன்பால் வருடத்திற்கு ஒருமுறை காண வருவார் என்பது நம்பிக்கை. இதை கேரளா மக்கள் ஓணம் பண்டிகையாக கடைபிடிக்கின்றனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா ஞாயிறன்று தொடங்கியது. அதம் சமயம் என்று அழைக்கப்படும் முதல்நாள் விழா கொச்சி அருகே திருப்புணித்துறை என்ற இடத்தில் நடைபெற்றது.

பாரம்பரிய கேரள மேள, தாளம் உற்சாகத்தில் ஆழ்த்தியது. பலர் கடவுள் போல் வேடமிட்டு ஆடிய படி வீதியில் சென்றனர். இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

ஓணத்தின் 10 நாட்களும் பல்வேறு கொண்டாட்டங்களுடன் களை கட்டும்.

இதில் முக்கியமானது புலிக் களியாகும். திரிசூரில் புலி வேடமணிந்து நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக செல்வதே புலிக்களி. இதை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஓணத்தின் இறுதி நாளான 13-ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.


Post Comment

Post Comment