மம்மி ரீபூட் - டாம் குரூஸுடன் இனையும் ஏ.ஆர்.ரஹமான்


Posted by-Kalki Team1999ல் வெளியான தி மம்மி படம் உலகெங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து மேலும் மூன்று படங்கள் இதன் தொடர்ச்சியாக வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படங்களில் பிரண்டன் ஃப்ரேஸர் கதாநாயகனாக நடிக்க ஸ்டீஃபன் சோமர்ஸ் இயக்கியிருந்தார். இந்நிலையில் மம்மி ரீபூட் என்னும் மம்மி படத்தின் மீள் உருவாக்கத்தை எடுக்கும் பணியை துவங்கியிருக்கிறார் அலெக்ஸ் குர்ட்ஸ்மென். இப்படத்தில் கதாநாயகனாக் நடிக்கை வைக்க டாம் குரூஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்க்கு முன் அலெக்ஸ் குர்ட்ஸ்மென் இயக்கியிருந்த பீபுள் லைக் அஸ் எனும் படத்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஹ்மானின் இசைக்கு ரசிகரான அலெக்ஸ் குர்ட்ஸ்மென் மம்மி ரீபூட் படத்திற்க்கும் ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க வைக்க திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post Comment

Post Comment