கமல் கெட்டப்பில் நடிக்கும் ஷாரூக்கான்!


Posted by-Kalki Team1989-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் அவர் குள்ள மனிதராக நடித்த அப்பு கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போதுவரை பேசப்பட்டும் வருகிறது. தொழில் நுட்ப வசதியில்லாத அந்த காலகட்டத்தில் தனது உடலை வருத்திக்கொண்டு கமல் நடித்த அந்த குள்ளமான வேடத்தில் நடிக்க எந்த நடிகர்களும் முயற்சி செய்யவில்லை.ஆனால், இப்போது கமல் நடித்த அந்த அப்பு கெட்டப்பில் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி விட்டார் ஷாரூக்கான். தனுஷ் நடித்த ராஞ்ஜனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் அந்த படத்தை இயக்குகிறார். அப் படத்தை இன்னும் தொடங்காதபோதும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்போவதாக அறிவித்து விட்டனர்.

மேலும், கமல் போன்று உடம்பை வருத்தி நடிக்காமல் இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படத்தில் நடிக்கப்போகிறாராம் ஷாரூக்கான்.


Post Comment

Post Comment