கார கொழுக்கட்டை :


Posted by-Kalki Teamதேவையானவை:

அரிசி மாவு - ஒரு கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

இட்லி மிளகாய்ப் பொடி

தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். தேங்காய் துருவல், இட்லி மிளகாய்ப் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறவும். தீயை நிறுத்திவிட்டு, ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவு கலவை எடுத்து உருட்டி தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.Post Comment

Post Comment