மா.கா.பாவுக்கு நோ சொன்ன அமலாபால்!


Posted by-Kalki Teamசிவகார்த்திகேயனுக்கு பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். கழுகு கிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த வானவராயன் வல்லவராயன் படம் வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து அவர் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளியான நவரச திலகம், அட்டி போன்ற படங்கள் தோல்விப்படங்களாகி விட்டன. இருப்பினும், மா.கா.பாவின் கைவசம் கடலை, மாணிக், பஞ்சு மிட்டாய் ஆகிய படங்கள் உள்ளன.மேலும், தற்போது மா.கா.பாவின் சம்பளமும் 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், திருமணத்திற்கு பிறகும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் அமலாபால், அந்த படத்தின் கதையைகூட கேட்காமல் ஹீரோ மா.கா.பா.

ஆனந்த் என்பதை கேட்டதுமே நோ சொல்லி விட்டாராம். ஆனபோதும், அவருக்கு இணையாக இன்னொரு முன்னணி நடி கையை தனது புதிய படத்திற்கு புக் பண்ணி விட வேண்டும் என்று முன்வச்ச காலை பின் வைக்காமல் அடுத்தகட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார் மா.கா.பா. ஆனந்த்.


Post Comment

Post Comment