சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா.?


Posted by-Kalki Teamசிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக களவாணி ஓவியா நடித்தார். அதையடுத்து ஆத்மியா, ரெஜினா, பிரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளுடன் நடித்து வந்த நிலையில், மான்கராத்தே படத்தில் முன்னணி நடிகை ஹன்சிகாவுடன் நடித்தார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு காக்கி சட்டையில் மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்த அவர் ரஜினிமுருகன், ரெமோ படங்களில் கீர்த்தி சுரேசுடன் டூயட் பாடியிருக்கிறார்.இந்த நிலையில், மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேருகிறார் சிவகார்த்திகேயன். இதனால் மார்க்கெட்டில் சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் எகிறி நிற்கிறது. அதனால் இனிமேல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பிரபல நடிகைகளுடன்தான் நடிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்துள்ள சிவகார்த்திகேயன், மோகன்ராஜா படத்தை அடுத்து பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடுகிறாராம்.

அடுத்த ஆண்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இந்த படமும், இதற்கு முன்பு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்கள் பாணியில் கிராமத்து காமெடி கதையில் உருவாகிறதாம். அதனால் கண்டிப்பாக அந்த படத்தில் சூரியும் இருக்கிறாராம்.Post Comment

Post Comment