வியக்க வைக்கும் காஷ்மோரா முதல் பார்வை :


Posted by-Kalki Teamகார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்க கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் காஷ்மோரா. இப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை நேற்று இரவு வெளியிடப்பட்டது. இந்தப் படம் பற்றி இதுவரை எந்த ஒரு புகைப்படம் வெளிவராத நிலையில் நேற்று வெளியான முதல் பார்வை புகைப்படம் வியக்க வைக்கும் அளவில் அமைந்துள்ளது. மொட்டைத் தலையுடன் தாடி, மீசை என அடையாளம் தெரியாத அளவிற்கு கார்த்தியின் தோற்றம் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு அசப்பில் பாகுபலி படத்தின் கட்டப்பாவை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இருப்பதும் மறுப்பதற்கில்லை.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு கோகுல் இயக்கி வரும் இந்தப் படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது.

கார்த்தியுடன் முதல் முறையாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். ஒரு ஃபேன்டஸி கலந்த சரித்திரக் கதை என்பதால் படத்தின் தயாரிப்பு நீண்டதாகச் சொன்னார்கள். இந்தப் படத்திற்காக பல பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.முதல் பார்வை பிரமிக்க வைத்துள்ளது, அது போலவே படமும் இருக்கட்டும்.

தமிழ்த் திரையுலகில் சமீப காலங்களில் வந்த ஃபேன்டஸி படமான இரண்டாம் உலகம், புலி போல இல்லாமல், பாகுபலி படம் போல காஷ்மோரா சாதனை படைக்கட்டும்.Post Comment

Post Comment