தேவதூதனாக மாறிய துல்கர் சல்மான்..!


Posted by-Kalki Teamகடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஆன் மரியா களிப்பிலானு என்கிற படம் வெளியானது. தெய்வத்திருமகள் நடித்தாரே பேபி சாரா அவரை முன்னிலைப்படுத்தி கதை பின்னப்பட்ட இந்தப்படத்தில் மலையாள ரசிகர்களுக்கு நன்கு பழக்கமான சன்னி வெய்ன் கதாநாயகனாக நடித்திருந்தார்.. மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத நிலையில் இந்தப்படத்தில் துல்கர் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றதும் படம் பிசினசாகி, தற்போது ரிலீஸாகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது..இந்தப்படத்தில் துல்கர் சல்மான் கொஞ்ச நேரமே வரும் தேவதூதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். கிளைமாக்ஸில் வரும் இவரது கதாபாத்திரமும் அதற்கான அவரது தோற்றமும் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.. இந்தப்படத்தில் துல்கர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் அவரது நண்பரான சன்னி வெய்ன் இதில் நடித்திருக்கிறார் என்பதால் தான்.. படத்தின் தயாரிப்பாளர் துல்கர் பற்றி குறிப்பிடும்பொழுது, "அவர் படத்தில் மட்டும் தேவதூதன் அல்ல.. உண்மையிலேயே எங்கள் படத்தை காக்க வந்த தேவதூதன்.. அவர் இல்லையென்றால் சாதரண இந்தப்படத்திற்கு இப்படி ஒரு விளம்பரமும் வியாபாரமும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை" என மனம் நெகிழ குறிப்பிட்டுள்ளார்.


Post Comment

Post Comment