ஹாலிவுட் படத்தில் அரவிந்த்சாமி!


Posted by-Kalki Teamரோஜா நாயகன் அரவிந்த்சாமி, ஹீரோவாக மட்டுமின்றி, வில்லன், குணசித்ர வேடங்களிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை, கடல், தனி ஒருவன் படங்களில் நிரூபித்தார். அதையடுத்து அவரை பல டைரக்டர்கள் கால்சீட் கேட்டு துரத்தினர். ஆனால் அவரோ, கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததால் பல கதைகளை அவர் ஓகே பண்ணவில்லை. இந்த நிலையில், போகன் படத்தில் ஜெயம்ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். மேலும், தனி ஒருவனுக்குப்பிறகு டியர் டேட் என்ற இந்தி படத்தில் நடித்த அரவிந்த்சாமி, போகனைத் தொடர்ந்து சதுரங்கவேட்டை-2வில் நடிக்கும் அவர், தமிழில் பாலா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறாராம். தமிழ் நடி கர்களில் மாதவன் 4 ஆங்கில படங்களில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தனுஷ் ஒரு ஆங்கில படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆக, கோலிவுட் நடிகர்கள் ஹாலிவுட்டுக்கு ஏற்றுமதியாகிக்கொண்டிருக்கிறார்கள்.


Post Comment

Post Comment