அஜித் பட நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் அக்ஷரா ஹாசன்!


Posted by-Kalki Team



வீரம், வேதாளம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவாவுடன் இணைந்து மற்றொரு படத்தில் பணியாற்றுகிறார் அஜித். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தல 57 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள அக்ஷரா, தமிழில் அறிமுகமாகும் படம் இது. இதுதவிர, சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் அக்ஷரா.

இந்தப் படத்தில் காஜல் அகர்வாலும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இண்டர்போல் அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. 2017 ஏப்ரல் மாதத்தில் படம் வெளிவரவுள்ளது.


Post Comment

Post Comment