மணிரத்னம் படத்தில் பரபரப்பாக இயங்கும் கீர்த்தனா பார்த்திபன் !


Posted by-Kalki Teamகமல்ஹாசனின் இளைய மகளான அக்சரா ஹாசன், மணிரத்னம் இயக்கியுள்ள பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதேபோல், பார்த்திபனின் மகளான கீர்த்தனாவும் டைரக்டர் மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, மாதவன்-சிம்ரன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனா அதன்பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் மணிரத்னத்திடமே உதவி இயக்குனராக சேர்ந்தார்.அந்த வகையில், தற்போது மணிரத்னம் கார்த்தியை நாயகனாக வைத்து இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உதவி இயக்குனராக இருக்கிறார் கீர்த்தனா. அதோடு, படத்தின் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பொறுப்பினை அவரிடம் தான் கொடுத்துள்ளாராம் மணிரத்னம். அதனால் படத்தில் நடிப்பதற்காக வரும் நடிகர் நடிகைகளை ஆடிசன் வைத்து எந்த கேரக்டருக்கு யாரை தேர்வு செய்யலாம் என்பதை கீர்த்தனாதான் முடிவு செய்கிறாராம். அவரைத் தொடர்ந்து இறுதி முடிவினை மணிரத்னம் எடுக்கிறாராம். ஆக, காற்று வெளியிடை படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக்கொண்டி ருக்கிறாராம் கீர்த்தனா பார்த்திபன்.


Post Comment

Post Comment