பருப்பு உருண்டை குழம்பு


Posted by-Kalki Team



பருப்பு உருண்டை குழம்பு செய்வதற்கான சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்

உருண்டைக்கு :

கடலைபருப்பு – அரை கப்

துவரம்பருப்பு – 1 மேசைகரண்டி

காய்ந்தமிளகாய் – 3

சோம்பு – 1 / 2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 / 4 கப்

பொடியாக நறுக்கிய பூண்டு – 1 மேசைகரண்டி

பொடியாக நறுக்கிய மல்லிதழை – 1 மேசைகரண்டி

தேங்காய் துருவல் – 1 மேசைகரண்டி

உப்பு – தேவையான அளவு

குழம்புக்கு :

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3

மிளகாய்த்தூள் – 2 1 / 2 தேக்கரண்டி

தனியாதூள் – 1 1 / 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி

புளி – எலுமிச்சை அளவு

பூண்டு – 10 பல்

கருவேப்பில்லை, மல்லிதழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

சோம்பு – 1 / 2 தேக்கரண்டி

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

உருண்டைக்கான பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் ஊறிய பிறகு வரமிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும் உருண்டைக்கென கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து ஒன்றாக உருட்டிக் கொள்ளவும்.இவற்றை ஆவியில் அரைவேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, புளி தண்ணீரையும் ஊற்றவும்.அதில் மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.குழம்பு நன்கு கொதிக்கும்போது, செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை அதில் போடவும்.10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், கருவேப்பிலை, மல்லிதழை தூவி இறக்கவும்.

குறிப்பு ;

நீர்க்க இருக்கும் இந்த குழம்பு குழைவான சாதத்துக்கு நன்றாக இருக்கும்.

இதையே கெட்டியாக வைக்க விரும்புவர்கள் தேங்காய் துருவலுடன், 5 முந்திரிபருப்புகளை வைத்து அரைத்து கடைசியில் சேர்த்து இறக்கினால் கெட்டியான குழம்பு கிடைக்கும்.


Post Comment

Post Comment