வசூலில் தூம் 3ஐ தூக்கி சாப்பிட்டுவிட்டு பாகுபலியை துரத்தும் சல்மானின் சுல்தான் :


Posted by-Kalki Teamமும்பை: சல்மான் கான் நடிப்பில் வெளியான சுல்தான் படம் உலக அளவில் சுமார் ரூ. 550 கோடி வசூல் செய்து தூம் 3 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடித்த சுல்தான் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியான சுல்தான் வசூலில் சக்கை போடு போடுவது படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் சுல்தான் உலக அளவில் சுமார் ரூ.550 கோடி வசூல் செய்துள்ளது.

ரூ.550 கோடி

உலக அளவில் அதிகம் வசூல் செய்த பாலிவுட் படம் என்ற பெருமையை பெற்றது ஆமீர் கானின் தூம் 3. அந்த படம் உலக அளவில் ரூ.542 கோடி வசூலித்தது. இந்நிலையில் ரூ.547.12 கோடி வசூலுடன் தூம் 3 படத்தின் சாதனையை சுல்தான் முறியடித்துள்ளது.

சுல்தான்

சுல்தான் படம் ரிலீஸான 19 நாட்களில் வெளிநாடுகளில் ரூ.145.66 கோடியும், இந்தியாவில் ரூ.401.46 கோடியும் வசூல் செய்துள்ளது. பாகுபலி படம் உலக அளவில் ரூ.586.45 கோடி வசூலித்தது. சுல்தான் அந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் ரிலீஸாகியும் சுல்தானின் வசூல் வேட்டைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருவரின் படங்களும் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

ட்விட்டர்

சுல்தான் உலக அளவில் ரூ.550 கோடி வசூல் செய்துள்ளது குறித்து பலரும் பேசுவதால் SULTAN 550Cr WORLDWIDE என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 9வது இடத்தில் டிரெண்டாகியுள்ளது.Post Comment

Post Comment