ஜில் ஜில் ஜிகர்தண்டா


Posted by-Kalki Teamஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது.

தேவையான பொருட்கள் :

கடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - 1/4 ஸ்பூன்

பால் - 3 கப்

ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு ஸ்பூன்

ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்

ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு ஸ்பூன்

நட்ஸ் - சிறிது

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாதாம் பிசினைப் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சவும், கொஞ்சம் பதத்திற்கு வரும்போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பிறகு பாலை நன்கு திக்காக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். சர்க்கரை கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

கடல் பாசி என்றால் , ஒரு கப்பில், ஒரு மேசைக்கரண்டி கடல் பாசியை போட்டு, அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் க்ரீம் வைக்கவும். பின் அதில் அந்த குளிர்ந்த பாலை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இதுவே பாதாம் பிசின் என்றால், ஊறியப் பின் அது பார்க்க ஜெல்லி போல் இருக்கும். அந்த பாதாம் பிசின் மேல் நன்னாரி சிரப், குளிர்ந்த பால் ஆகியவற்றை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இப்போது சுவையான குளிர்ச்சியான ஜில்...ஜில்...ஜிகர்தண்டா ரெடி!!!Post Comment

Post Comment