அமெரிக்காவில் 442 தியேட்டர்களில் கபாலி வெளியீடு :


Posted by-Kalki Teamதமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் கபாலி திரைப்படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களை விட இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்க, ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள கபாலி படம் அமெரிக்காவில் மட்டும் 442 தியேட்டர்களில் வெளியாகிறது. அமெரிக்காவில் படத்தை வெளியிடும் சினி கேலக்சி நிறுவனம் இது பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழில் வெளியாகும் கபாலி படம் 223 தியேட்டர்களிலும் தெலுங்கில் வெளியாகும் கபாலி 219 தியேட்டர்களிலும் திரையிடப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை பட வெளியீட்டிற்கு முன்னதாக மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. பல ஊர்களில் 21ம் தேதியே பிரிமீயர் காட்சியும் நடைபெற உள்ளது. அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரீமியர் காட்சிகள் மூலம் மட்டுமே 15 மில்லியன் டாலர்கள் வசூலாகலாம் என சொல்கிறார்கள். கபாலி வெளியாக இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் அதற்குள் மேலும் சில ஊர்களில் பிரிமீயர் காட்சிகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களின் அனைத்து வசூலையும் கபாலி படம் அமெரிக்காவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post Comment

Post Comment