வரலாற்று படம் இயக்குகிறார் சுசீந்திரன் :


Posted by-Kalki Teamவெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டு, அழகர் சாமியின் குதிரையில் குதிரை பாசம், ஜீவா படத்தில் கிரிக்கெட் விளையாட்டு, பாயும்புலி, பாண்டியநாடு படத்தில் கமர்ஷியல் ஆட்டம், ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நவீன காதல்... என வெவ்வேறு களங்களில் படம் எடுத்த சுசீந்திரன், முதன் முறையாக வரலாற்று படம் ஒன்றை இயக்குகிறார். படத்தின் பெயர் மாவீரன் கிட்டு. இது விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த கிட்டுவின் கதை அல்ல. 1985ம் ஆண்டு காலகட்டத்தில் பழனி மலை பகுதியில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி அதிகம் வெளிவராமல் போன ஒரு வீரனின் கதை. விஷ்ணு விஷால் மாவீரன் கிட்டுவாக நடிக்கிறார். அவரது வில்லனாக பார்த்திபன் நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சூரி காமெடி பண்ணுகிறார். டி.இமான் இசை அமைக்கிறார், சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். சுசீந்திரனின் நல்லுசாமி பிக்சர்சும் ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இன்று முதல் பழனியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 50 நாட்கள் வரை தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது.


Post Comment

Post Comment