குமுதவள்ளியாக வலம்வந்த ராதிகா ஆப்தே !


Posted by-Kalki Teamபாலிவுட் நடிகையாக ராதிகா ஆப்தே, பெமினா, பிலிம்பேர் உள்ளிட்ட சில ஆங்கில புத்தகங்களின் அட்டைப்படங்களில் கவர்ச்சி போஸ் கொடுத்து அலங்கரித்தவர். அதோடு பாலிவுட் படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்து வருபவர். இந்நிலையில், கபாலி படத்தின் நாயகியான குமுதவள்ளி கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் ரஞ்சித். அந்த வகையில், மாடர்ன் நடிகையான ராதிகா ஆப்தே அந்த படத்தின் ஆடிசனுக்கு வந்தபோது, இவர் எப்படி கபாலி தோட்டத்து பெண்ணாக நடிக்க சரியாக இருப்பார் என்று சிலர் பேசிக்கொண்டார்களாம்.ஆனால் அப்படி இருந்த ராதிகா ஆப்தேவை, சென்னை ஸ்லம் ஏரியா பெண்ணாக சேலை கெட்டுப்புக்கு பக்காவாக மாற்றி கேமரா முன்பு அழைத்து வந்தபோது அனைவரும் அசந்து விட்டார்களாம். அந்த அளவுக்கு கபாலி தோட்டத்து குமுதவள்ளியாகவே மாறிப்போயிருந்தாராம் ராதிகா ஆப்தே. அதையடுத்து படப்பிடிப்பு தளத்துக்கு அதே கெட்டப்பில் அவரை கொண்டு வந்து இறக்கியபோது, வேடிக்கை பார்த்தவர்களுக்கு அது ராதிகா ஆப்தே என்பதே தெரியவில்லையாம். அதைப்பார்த்து இதுதான் இந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி என்றாராம் டைரக்டர் ரஞ்சித்.


Post Comment

Post Comment