பீரியட் பிலிமில் நடிக்கும் மொட்டை ராஜேந்திரன் !


Posted by-Kalki Teamநான் கடவுள் ராஜேந்திரன் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார் அவர். காரணம், தன்னிடம் எந்த கம்பெனி கால்சீட் கேட்டாலும் அவர் இல்லை என்று சொல்வதில்லை. எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி நடித்து விடுகிறார். அதனால் அவரை நம்பி தயாரிப்பாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அதோடு அவரது மார்க் கெட்டும் ஸ்டெடியாக உள்ளதால், தற்போது கைநிறைய படங்கள் வைத்திருக்கும் நடிகராக இருக்கிறார் ராஜேந்திரன்.இந்த நிலையில், விரைவில் அவர் ஒரு பீரியட் பிலிமிலும் நடிக்கிறாராம். 1970-களில் நடக்கும் அந்த கதையில், மொட்டை ராஜேந்திரனுடன் மேலும் 4 காமெடியன்கள் நடிக்கிறார்களாம். அதில் லீடு ரோலில் அவர் நடிக்கிறாராம். கிராமங்களில் திருட்டுத்தொழில் செய்யும் வேடத்தில் நடிக்கயிருக்கும் மொட்டை ராஜேந்திரன், அந்த படத்துக்காக அந்த காலகட்டத்து மனிதர்களைப்போன்று உடையணிந்து நடிக்கிறாராம்.


Post Comment

Post Comment