முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தில் பாகுபலி :


Posted by-Kalki Teamஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் இன்று பாகுபலி ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியத் திரையுலகில் இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்ற பெயரைப் பெற்ற பாகுபலி படத்திற்கு உலகம் முழுவதும் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. 150 கேடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 700 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் பல சர்வதேச வெளியீடுகள் படத்திற்காகக் காத்திருக்கின்றன. ஜுலை 22ம் தேதி சீனாவில் மட்டும் சுமார் 6500 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது.கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற முதல் பாகத்தின் முடிவுடன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த வருடக் கடைசியில் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. எப்படியும் அடுத்த கோடை விடுமுறையில் இரண்டாம் பாகம் வெளியாகும் எனத் தெரிகிறது.பாகுபலி படத்தின் முதல் பாகக் கொண்டாட்டத்திற்காக டிவிட்டரில் தனியாக ஹேஷ்டேக் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. "1YearForIndianEpicBaahuali" என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் தங்களது பாகுபலி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என படக் குழு சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி இந்திய சினிமாவுக்குப் பெருமை...!


Post Comment

Post Comment