கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த சந்தோஷ் நாராயணன்!


Posted by-Kalki Teamஅட்டகத்தி, மெட்ராஸ், இறுதிச்சுற்று உள்பட பல படங்களுக்கு இசைய மைத்தவர் சந்தோஷ் நாராயணன். இப்போது ரஜினியின் கபாலி, விஜய்யின் 60-வது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். மேலும், தனது இசையில் வித்தியாசமான குரல் வளம் கொண்ட நிறைய புதுமுக பாடகர் - பாடகிகளுக்கும் வாய்ப்பளித்து வரும் அவர், தற்போது சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சந்தானத்துக்கு பின்னணி பாட வித்தியாசமான குரல் வளம் தேடி வந்த சந்தோஷ் நாராயணன் எதிர்பார்த்தபடி குரல் கிடைக்கவில்லையாம். அதனால் சினிமாவில் பாட விரும்பும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பாடிய பாடல் ஒன்றினை தனது மெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவர் இணையப்பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ஏராளமான இளவட்ட பாடகர்கள் தாங்கள் பாடிய பாடல்களில் ஒன்றை செலக்ட் பண்ணி சந்தோஷ் நாராயணனுக்கு அனுப்பியவண்ணம் உள்ளார்களாம்.


Post Comment

Post Comment