ஆக்சன் வேடத்தில் அனுஷ்கா!


Posted by-Kalki Teamஅருந்ததியில் அதிரடியான ரோலில் நடித்த அனுஷ்கா, ராணி ருத்ரம்மா தேவியில் சண்டை காட்சிகளிலும் நடித்து கலக்கினார். பாகுபலியில் அவருக்கு ஆக்சன் காட்சிகளில் இல்லை என்றபோதும, பாகுபலி-2வில் ஆக்சன் காட்சிகள் உள்ள தாம். இந்தநிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 57-வது படத்தில் நாயகியாக நடிக்கும் அனுஷ்காவுக்கு இந்த படத்தில் ஆக்சன் ஹீரோயினி வேடமாம். வெளிநாட்டில் அவருக்கான சண்டை காட்சி படமாகிறதாம்.மேலும், அஜித்தின் 57வது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறும் நிலையில், கடைசிகட்ட படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடக்கிறதாக சொல்கிறார்கள். இதுவரை அஜித் நடித்ததில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் சில ஹாலிவுட் டெக்னீசியன்களும் பணியாற்றுகிறார்களாம். உலகத்தரம் வாய்ந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பல்கேரியா நாட்டில் தொடங்கயிருப்பதாக கூறுகிறார்கள்.


Post Comment

Post Comment