கோபி 65 : Gobi 65


Posted by-Kalki Team



தேவையான பொருட்கள் :

- காலிப்பிளவர் – 1 (சிறியது)

- கோபி65 பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்

- கார்ன் மாவு – 1 டீஸ்பூன்

- அரிசி மாவு – 1 டீஸ்பூன்

- கடலை மாவு - 1 டீஸ்பூன்

- உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

• முதலில் காலிப்பிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.

• பின் அதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த நீரில் 10 நிமிடங்கள் போடவும்.

• ஒரு பாத்திரத்தில் காலிப்பிளவர் பூக்களை போட்டு, அதனுடன் 65 பவுடர், கார்ன் மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, காலிப்பிளவரை போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும். • கிரிஸ்பியான கோபி 65 ரெடி.

விரிவுரை :

கோபி 65 அனைத்து சாத வகைகளுக்கும் பொருந்தும். ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.


Post Comment

Post Comment