பெண்ணின் அழுகுரல் கேட்டு ஓட்டம் பிடித்த சந்தானம் யூனிட்!


Posted by-Kalki Teamவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்த சந்தானம், அதையடுத்து இனிமேல் இப்படித்தான் என்ற படத்திலும் நாயகனாக நடித்தார்.

அந்த சமயத்தில், இனிமேல் இப்படித்தான் என்பது கதைக்கேற்ற தலைப்பு. மற்றபடி இனிமேல் நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்பதை சொல்வதற்காக இந்த தலைப்பை வைக்கவில்லை என்று கூறினார். ஆனபோதும் அதன்பிறகு அவர் ஹீரோவாக மட்டும்தான் நடித்து வருகிறார். மேலும், எப்படி காமெடியனாக நடித்தபோது ஒரு காமெடி இலாகா வைத்து வசனங்களை ரெடி பண்ணினாரோ, அதேபோல் இப்போது ஹீரோவான பிறகு ஒரு கதை இலாகா வைத்திருக்கிறார் சந்தானம். அவர்கள் மூலம் தனக்கான கதையை பல கோணங்களில் அலசி ஆராய்ந்துதான் ஓகே

செய்கிறார்.இந்நிலையில், தற்போது அவரது நடிப்பில் வெளியாக தயாராகி விட்ட படம் தில்லுக்குத்துட்டு. இந்த படத்தை லொள்ளுசபா இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ளார். இவரை தனது குருநாதர் என்றே சொல்கிறார் சந்தானம்.

மேலும், இதற்கு முன்பு அரண்மனை படத்தில் மட்டுமே பேய் கதையில் நடித்துள்ள சந்தானம் அதையடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார். அதோடு இதுவரை பேயைக்கண்டுதான் மனிதர்கள் பயப்படுவது போல் கதை பண்ணினார்கள். ஆனால் இந்த படத்தில் மனிதனைக்கண்டு பேய் பயப்படுவதுதான் கதையாம். அதனால் ஒரேமாதிரியான பேய் படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இது வித்தியாசமாக இருக்குமாம்.

மேலும், இந்த தில்லுக்குத்துட்டு படப்பிடிப்பு ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்தபோது, நிஜமாலுமே ஒரு குகைக்குள் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டதாம். அதைக்கேட்டு சந்தானம், டைரக்டர் ராம்பாலா உள்பட அப்பட யூனிட்டே அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்களாம். அதோடு, டைரக்டர் ராம்பாலாவுக்கு பயத்தில் நெஞ்சே வலிக்க ஆரம்பித்து விட்டதாம்.

அதையடுத்து, என்னடா இது, பேய் படம் எடுக்க வந்த நானே பேயாகி விடு வேன் போலருக்கே -என்று சொல்லிக்கொண்டு சந்தானத்தின் பின்னாடியே அவரும் ஓட்டம் பிடித்தாராம்.


Post Comment

Post Comment