3ந் தேதி ரஜினி வருகை, 7ந் தேதி சென்சார், 22ந் தேதி கபாலி ரிலீஸ்?


Posted by-Kalki Teamதிட்டமிட்டபடி கபாலி வருகிற 15ந் தேதி ரிலீசாக வேண்டும். ஆனால் படத்தை மலாய் மொழியில் டப் செய்யும்போது ரஜினி வாய்சை அந்த ஸ்டைல் மாறாமல் மலாய் மொழியில் பேச சரியான ஆள் கிடைக்காமல் அது தள்ளிப்போனது. அதனால் திட்டமிட்டபடி படம் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது புதிய ஷெட்யூல்படி ரஜினி அமெரிக்காவில் இருந்து நாளை (3-ம் தேதி) சென்னை திரும்புகிறார், 4ந் தேதி தயாராக உள்ள பர்ஸ்ட் காப்பியை பார்க்கிறார். படம் 7ந் தேதி தணிக்கைக்கு அனுப்பப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்கப் படுகிறது. 22ந் தேதி படம் ரிலீசாகிறது. 90 சதவிகிதம் இந்த ஷெட்யூலில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.Post Comment

Post Comment