குற்றமே தண்டனை எனக்கு இன்னொரு காக்கா முட்டை! -ஐஸ்வர்யா ராஜேஷ் :


Posted by-Kalki Teamசினிமாவில் என்ட்ரியாகி ரம்மி, அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும் என பல படங்களில் நடித்தபோதும், காக்கா முட்டை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அடையாளம் கொடுத்தது. மேலும் அந்த படம்தான் தற்போது அவரை பாலிவுட்டுக்கும் கொண்டு சென்றிருக்கிறது. அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை மணிகண்டன் முக்கியமான டைரக்டராகி விட்டார். மேலும், அதையடுத்து விதார்த்தை வைத்து அவர் இயக்கியுள்ள குற்றமே தண்டனை படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.இந்த படத்திலும் இன்னொரு காக்கா முட்டை என்று சொல்கிற அளவுக்கு அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்துள்ளாராம் மணிகண்டன். இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், என்னைப்பொறுத்தவரை மரத்தை சுற்றி டூயட் பாடும் கதாநாயகி வேடங்களை விட, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிப்பதில் தான் ஆர்வமாக உள்ளேன். இரண்டாவது நாயகி வேடம் என்றாலும் எனக்கு கவலையில்லை. அந்த வகையில், இந்த குற்றமே தண்டனை படத்தில் இன்னொரு நாயகியாக பூஜா திவாரியாவும் உள்ளார். என்றாலும் எனக்கு கதையோடு கலந்த வேடம். அதனால் காக்கா முட்டை எப்படி எனக்கு பெயர் வாங்கித்தந்ததோ அதேபோல் இந்த குற்றமே தண்டனை படமும் என்னை பேச வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Post Comment

Post Comment