அதர்வாவுக்கு ஜோடியான ரெஜினா!


Posted by-Kalki Teamசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த ரெஜினாவுக்கு சரியான வெற்றிகள் அமையாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்று விட்டார். அதோடு, கிளாமர் கதைகளை தவிர்த்து வந்த அவர், ஒருகட்டத்தில் கிளாமர் குயினாகவும் களமிறங்கியதால் இப்போது ஆந்திராவில் பேசப்படும் நாயகியாகி விட்டார் ரெஜினா. அதோடு தமிலும் அவரது மார்க்கெட் சூடுபிடித்திருக்கிறது. தற்போது அவர் கைவசம் ராஜதந்திரம்-2, நெஞ்சம் மறப்பதில்லை, மாநகரம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்கள் உள்ளன.இதில் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பேய் வேடத்தில் நடித்துள்ள ரெஜினா, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் காமெடி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் மெட்ராஸ் கலையரசன்தான் நாயகனாக கமிட்டாகியிருந்தார். ஆனால் அவர் நடித்த டார்லிங்-2, ராஜாமந்திரிபோன்ற படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்காததால் அவருக்குப்பதிலாக இப்போது அதர்வா அந்த படத்தில் நாயகனாகியிருக்கிறார். இதில், அதர்வா ஜெமினிகணேசனாகவும், சூரி சுருளிராஜனாகவும் செம கலக்கு கலக்கப்போகிறார்களாம்.


Post Comment

Post Comment