பாலிவுட்டில் களமிறங்கிய இஷா தல்வார் :


Posted by-Kalki Teamதமிழில் தில்லு முல்லு படத்தில் நடித்தவர் நடிகை இஷா தல்வார். தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளில் நடித்தார். இப்போது, பாலிவுட்டில் களமிறங்கியிருக்கிறார். அக்ஷ்த் வர்மா இயக்கும் கலா கான்டி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சைப் அலிகான் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். ஆனால் இஷா தல்வார், சைப்பிற்கு ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படம் மூன்று விதமான கதைகளில் உருவாக இருக்கிறது. குறிப்பாக இப்பம் மும்பையில் இரவு நேரங்களை மையமாக வைத்து உருவாக உள்ளது.


Post Comment

Post Comment