ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கில் நர்ஸ் அக்கா கெட்டப் வெளியானது!


Posted by-Kalki Teamசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று இரவு டைரக்டர் ஷங்கர் வெளியிட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ கெட்டப்தான முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண் வேடத்தில் அவர் நடித்திருக்கும் நர்ஸ் அக்கா கெட்டப் பர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நிஜ பெண் போலவே காட்சி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன்.மேலும், அவ்வை சண்முகியில் கமல் பெண் வேடத்துக்காக அதிகமான சிரத்தை எடுத்துக்கொண்டது போன்று இந்த நர்ஸ் அக்கா வேடத்துக்காகவும் மணிக்கணக்கில் மேக்கப் போட்டு பெண்களின் மேனரிஸத்தை தனக்குள் கொண்டு வந்து நடித்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதோடு, பாடல் காட்சியிலும் சிவகார்த்திகேயனை ஒரு பெண்ணாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நடன மங்கைகள் ஆடுவது போன்று நளினமான உடல் அசைவு களை கொடுத்து அவரை ஆட வைத்திருக்கிறாராம் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம். அதனால் ரெமோ படத்தின் பாடல் காட்சிகளும் பிரமிக்கத்தக்கதாக உருவாகியிருக்கிறாராம்.


Post Comment

Post Comment