அக்டோபரில் ராம் சரணின் அடுத்த படம்:


Posted by-Kalki Teamப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரண் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகின்றார். துருவா என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ராம் சரண் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் தற்போது துவங்கிவிட்டதாம். இப்படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும் என கூறப்படுகின்றது.


Post Comment

Post Comment