கூடு விட்டு கூடு பாயும் ஜெயம்ரவி!


Posted by-Kalki Teamகூடு விட்டு கூடு பாயும் கதைகளில் உருவான படங்கள் ஒருகாலத்தில் அவ்வப் போது வந்தன. ஆனால் சமீபகாலமாக வரவில்லை. இந்நிலையில், தற்போது ஜெயம்ரவி-அரவிந்த்சாமி இணைந்து நடிக்கும் போகன் படம் அந்த மாதிரியான கதையில்தான் உருவாகி வருகிறதாம். அதாவது ஜெயம்ரவியின் உடம்பில் அரவிந்த்சாமியின் உயிர் புகுந்து கொள்வதுதான் பெரும்பகுதி கதையாம்.

இறுதியில் அரவிந்த்சாமியின் உடம்பில் ஜெயம்ரவி புகுந்து கொள்வாராம். இப்படியான ஒரு கதைதான் போகன் படமாம்.மேலும், கூடுவிட்டு கூடு பாய்வது என்பது பழமையான கதை என்பதால் அதை இன்றைய அதிநவீன டெக்னாலஜி முறையில் படமாக்குகிறார்களாம். சாதாரண மாக உயிர் இல்லாத ஒரு உடம்பில்தான் இன்னொரு உயிர் புகுந்து கொள்ள முடியும்.

ஆனால் உயிர் உள்ள உடம்பிற்குள் எப்படி இன்னொரு உயிர் புகுந்து கொண்டு சில வேலைகளை செய்கிறது என்பதுதான் இந்த படமாம். ஆக, ரசிகர்களுக்கு இந்த போகன் புதிய அனுபவமாக இருக்குமாம். ஆக, மிருதன் படத்தில் வித்தியாசமான கதையில் நடித்த ஜெயம்ரவி, இந்த படத்தில் இன்னொரு புதிய கோணத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார்.


Post Comment

Post Comment