குறும்பட இயக்குனரை அதிரவைத்த மோகன்லால்..!


Posted by-Kalki Teamமலையாளத்தில் மூன்று படங்களை இயக்கியவர் அனீஸ் அன்வர்.. அதிலும் ஐந்து கர்ப்பிணி பெண்களை மையப்படுத்தி இவர் எடுத்த ஜக்காரியுடே கர்ப்பிணிகள் படம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று.. என்னவோ தெரியவில்லை அடுத்த படத்திற்கு கதை தேடாமல், திடீரென சுற்றுச்சூழலை பின்னணியாக வைத்து குழந்தைகளை மையப்படுத்தி ஒரு குறும்படம் இயக்கவேண்டும் என்கிற ஆசை இவருக்கு ஏற்பட்டது.. அத்துடன் இன்னொரு காஸ்ட்லி ஆசையும் ஏற்பட்டது.. அது மோகன்லாலை எப்படியாவது இந்த குறும்படத்தில் நடிக்கவைத்து விடவேண்டும் என்பது. ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா என சுற்றியிருந்தவர்கள் அவநம்பிக்கைப்பட, ஒரு வார்த்தை கேட்டுத்தான் பார்ப்போமே என மோகன்லாலை நேரில் சந்தித்து கான்செப்ட்டையும் சொன்னார் அனீஸ் அன்வர்.

மோகன்லாலுக்கு கான்செப்ட் பிடித்துவிடவே தான் நடிப்பதாக வாக்கு தந்தார்.. சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என்பதால் தனது வீட்டிலேயே படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அனுமதியும் தந்தார்.. இனிதான் ஹைலைட்டே.. மோகன்லால் வீட்டில் படப்பிடிப்பை நடத்திய இயக்குனர் அனீஸ் அன்வர், நமக்காக இவ்வளவு நேரம் ஒதுக்கி நடித்துக்கொடுக்கும் மோகன்லாலை, டப்பிங் பேசுவதற்காக வேறு ஸ்டுடியோவுக்கு இழுத்தடித்து சிரமப்படுத்த வேண்டுமா என்கிற எண்ணத்தில் கையோடு ஸ்பாட் டப்பிங் டீமையும் அழைத்து வந்திருந்தார்.. அதைக்கண்ட மோகன்லால், குறும்படம் என்றாலும் கூட எந்த விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என கூறியதோடு தான் நேரம் கிடைக்கும்போது ஸ்டுடியோவுக்கே வந்து டப்பிங் பேசித்தருவதாக படக்குழுவினரை அனுப்பி வைத்தார். சொன்னபடியே வந்து டப்பிங்கும் பேசித்தந்தார். ஒரு குறும்படத்திற்காக கூட இத்தனை மெனக்கெடுவதால்தான் அவர் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கிறார் என வியந்து நிற்கிறாராம் அனீஸ் அன்வர்.


Post Comment

Post Comment