தனுஷ் படத்திலும் ஜி.வி.பிரகாசுக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன்!


Posted by-Kalki Teamமுன்பு தனுஷ் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்தான் அதிகமாக இசையமைத்து வந்தனர். ஆனால் அனிருத் வந்த பிறகு மற்றவர்களுக்கு இடமில்லாமல் போனது. ஆனால் சமீபகாலமாக தனுஷ்

படங்களில் அனிருத் இல்லை. இமான், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இடம்பிடித்து வருகின்றனர். குறிப்பாக, வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்தார்.

அது மட்டுமின்றி வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கயிருக்கும் வடசென்னை படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைப்பதாக இருந்தது.ஆனால், இப்போது வடசென்னை படத்திற்கு ஜி.வி.பிரகாசுக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறாராம்.

இதற்கு முக்கிய காரணம், விஜய்யின் தெறி படத்தின் பாடல்கள் எதிர்பார்த்தபடி

ஹிட்டாகவில்லை என்ப தோடு, தற்போது ஜிவி.பிரகாஷ் நடிப்பிலேயே அதிக ஆர்வம் காட்டுவதால் முன்பு மாதிரி அவரால் சிறந்த இசையை தரமுடியாது என்று நினைக்கிறார்களாம். ஆனபோதும் கவலைப்படவில்லை ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் முன்னவச்ச காலை பின் வைப்பதாக இல்லை என்று யாரிடமும் இறங்கிச்சென்று வாய்ப்பு கேட் காமல் நடிப்பிலேயே முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்


Post Comment

Post Comment