ஆண்டரியா உடன் முதன்முறையாக சித்தார்த் :


Posted by-Kalki Teamசித்தார்த் நடித்த லேட்டஸ்ட் படங்களான அரண்மனை-2, ஜில் ஜங் ஜக் ஆகிய படங்கள் எதிர்பாரத்த அளவுக்கு ஓடவில்லை. எனவே அடுத்து என்ன மாதிரியான படங்களில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார் சித்தார்த்.தற்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டட சித்தார்த், ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். திலீப்புடன் ஒரு மலையாள படம், கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி. க்ருஷ் இயக்கும் சைத்தான் கி பச்சே படம், சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கம் படம் என வரிசையாக படங்களை கமிட் செய்து வைத்துள்ளார் சித்தார்த். இந்த மூன்று படங்கள் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் ஆர்யாவின் தம்பி நடித்த காதல் 2 கல்யாணம் என்ற படத்தை இயக்கியவர். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில் சித்தார்த்தை வைத்து 3 மொழிகளில் உருவாகவிருக்கும் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, ஹிந்தி வெர்சன்களுக்கு The House Next Door என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் பதிப்புக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆன்டிரியா! இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்து நடிக்கவிருக்கும் படம் இது. இந்தக் தகவலை சித்தார்த்தே அதிகாரபூர்வமாக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குகிறது!


Post Comment

Post Comment