ரஜினியைத் தொடர்ந்து அஜித்தும் கேங்ஸ்டர் கதையில் நடிக்கிறார்!


Posted by-Kalki Teamபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் ஆடியோ நாளை வெளியாகிறது. மேலும், இந்த படத்தில் சென்னையிலுள்ள மைலாப்பூர் கபாலி தோட்டத்தில் வாழும் கபாலி என்கிற தாதாவாக ரஜினி நடித்துள்ளார்.

பின்னர் மலேசிய சிறையில் கைதிகளாக மாட்டிக்கொள்ளும் தமிழர்களை காப்பாற்ற கேங்ஸ்டராக உருவெடுக்கிறாராம். அந்த வகையில், இதுவரை தமிழ்த்திரைகளில் பார்த்திராத அதிரடியான ரஜினியை இந்த கபாலியில் பார்க்கலாம் என்று அப்படத்தில் நடித்துள்ள நடிகர் -நடிகைகளே ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.மேலும், ரஜினியைத் தொடர்ந்து அஜித்தும் தனது 57-வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்கிறாராம்.

இதற்கு முன்பு சிவா இயக்கத்தில் நடித்த வேதாளம் படத்தில் மொட்டைத் தலை கெட்டப்பில் தோன்றி சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தினார் அஜித். அந்தவகையில், இந்த 57-வது படத்தில் அஜித்தின் கேங்ஸ்டர் கெட்டப் மிரட்டலாக சித்தரிக்கப்பட உள்ளதாம். அதன்காரணமாக, வேதாளம் படத்தை விடவும் இந்த புதிய படத்தை படமாக்க அதிகப்படியான டயம் எடுத்துக்கொள்ளப்போகிறாராம் சிவா.


Post Comment

Post Comment