புலி முருகன்படக்குழுவினரை துரத்திய காட்டு யானைக்கூட்டம்..!


Posted by-Kalki Teamசாகசங்களின் மொத்த வடிவமாக மோகன்லால் நடிக்கும் புலி முருகன் படம் உருவாகியுள்ளது. சண்டை காட்சிகளுக்கே டூப் போட விரும்பாத மோகன்லால், சாகச காட்சிகளுக்கு மட்டும் டூப் போடுவாரா என்ன..? அதனால் தான் படத்தில் பிரதான இடம்பெற்றுள்ள கதாபாத்திரமான புலியுடன் இணைந்து நடித்துள்ளார் மோகன்லால்.. அதுமட்டுமல்ல, கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தவேண்டி வந்தபோது காட்டு யானைகளின் துரத்தலுக்கு ஆளானதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.அதாவது காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்த முடிவுசெய்த இயக்குனர் வைசாக், விடியற்காலை ஐந்து மணிக்கே படப்பிடிப்பை துவங்கி விடுவாராம். காரணம் அப்போதுதான் இருள் மறைந்து காட்டு விலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் வெளியே வர ஆரம்பிக்குமாம்.

அப்போது படம்பிடித்தால் தான் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என்பது வைசாக்கின் தீமானம். அப்படி ஒரு நாள் காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தபோது திடீரென காட்டு யானைகள் படக்குழுவினரை நோக்கி ஓடிவர ஆரம்பித்ததாம். ஒரு வழியாக சாமர்த்தியமாக தப்பித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்களாம் படக்குழுவினர். நிஜத்தைப்போலவே படத்திலும் த்ரில்லிங் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் படக்குழுவினர்.


Post Comment

Post Comment