ரோமியோ ஜூலியட் போன்ற கேரக்டர் தேடும் ஹன்சிகா!


Posted by-Kalki Teamமும்பை நடிகையான ஹன்சிகாவை தமிழ்ப்படங்களில் வெறும் கவர்ச்சி பொம்மையாகத்தான் அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சுந்தர்.சி தனது அரண்மனை படத்தில் அவருக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்தார். அதை யடுத்து, ஜெயம்ரவி நடித்த ரொமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாதான் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு ஒரு அதிரடியான கதாநாயகியாக நடித்தார். அந்த வகையில் அந்த ரோலில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணினார் ஹன்சிகா.ஆனால் அப்படி நடிப்பில் தனது இன்னொரு முகத்தை ஹன்சிகா வெளிப் படுத்தியபோதும் அதற்கடுத்து அவர் ஓகே செய்த கதைகள் அவருக்கு ஹிட்டாக அமையவில்லை. அடுத்தடுத்த தோல்விகளால் அவரது மார்க்கெட்டும் தற்போது சரிந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஜெயம்ரவியுடன் போகன் படத்தில் இணைந்திருக்கிறார் ஹன்சிகா.

என்றாலும் இந்த படத்தில் தனி ஒருவனைப் போன்று ஜெயம்ரவி-அரவிந்த்சாமி இருவருமே மொத்த கதையிலும் பயணிப்பதால் ஹன்சிகா டூயட்டிற்காக மட்டுமே

பயன்படுத்துப்படுகிறாராம்.இந்த நிலையில், தனது திறமைக்கு தீனி போட ரோமியோ ஜூலியட் மாதிரியான கதைகள் வேண்டும் என்று தேடத் தொடங்கியிருக்கும் ஹன்சிகா, அந்த படம் போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் நான் சினிமாவில் இன்னும் அதிகப்படியான ஆண்டுகள் ஜொலிப்பேன் என்று சொல்லிக்கொண்டு படவேட்டை நடத்துவதோடு, தனது சம்பளத்தையும் கணிசமான அளவு குறைத்திருப்பதாக சொல்கிறார்கள்.


Post Comment

Post Comment