அட்லியின் அடுத்த பட நாயகன் கார்த்தி :


Posted by-Kalki Teamபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்தவர் அட்லி. அவரது முதல் படமான ராஜா ராணியை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்தார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என பலர் நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு விஜய்க்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தெறி படத்தை இயக்கினார் அட்லி. அந்த படமும் வசூல்ரீதியாக ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத் தைப்பற்றிய எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை அட்லி. கேட்டவர்களிடம் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்பதோடு முடித்துக்கொண்டார்.ஆனால், தனது அடுத்த படத்தை கார்த்தியை நாயகனாக வைத்து அட்லி இயக்குவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் பிலிம்ஸ் கல்பாத்தி அகோரம் அந்த படத்தை தயாரிக்கிறாராம். தோழா படத்திற்கு பிறகு கார்த்திக்கிற்கு தெலுங்கிலும் நிறைய ரசிகர்கள் உருவாகியிருப்பதால், அந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்குகிறாராம் அட்லி. மேலும், இந்த படத்தில் முதல் முறையாக அதிரடி ஆக்சன் கதையில் நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் குறித்த ஆலோசனையில் தற்போது ஈடுபட்டிருக்கிறாராம் அட்லி.ஆக, காஷ்மோரா படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி, அந்த படத்தை முடித்ததும் அட்லி இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.Post Comment

Post Comment