நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோடி சேரும் மோகன்லால்-கவுதமி: 3 மொழி படத்தில் நடிக்கிறார்கள்


Posted by-Kalki Teamமோகன்லாலும், கவுதமியும் மலையாளத்தில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தவர்கள். 1990ம் ஆண்டு வெளிவந்த ஹிஸ்ஹெனஸ் அப்துல்லா படத்தில் இணைந்து முதலில் நடித்தார்கள். அதன் பிறகு பல படங்களில் ஜோடியாக நடித்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.தமிழில் நமது, தெலுங்கில் மனமன்தா, மலையாளத்தில் நம்முட என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தை சாய் சிவானி, வாராஹி சலன சித்ரம், சாய் கோரப்பட்டி புரொடக்ஷன் ஆகிற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதில் மோகன்லால், கவுதமி ஜோடியுடன் விஸ்வநாத், ஹனிஷா என்ற இளம் ஜோடியும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்படி மாருதிராவ் நடிக்கிறார்கள். ராகுல் ஸ்ரீவத்சவ் ஒளிப்பதிவு செய்கிறார், மகேஷ் சங்கர் இசை அமைக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி இயக்குகிறார். த்ரிஷ்யம் பாணியிலான பேமிலி த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. சத்தமே இல்லாமல் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.


Post Comment

Post Comment