மகேஷ் பாபுவின் ஆடை அலங்காரத்திற்கு மட்டும் ரூ 1 கோடி செலவு


Posted by-Kalki Teamமகேஷ் பாபு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரம்மோற்சவம் திரைப்படம் நாளை(மே 20) பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த அடல்லா இயக்கத்தில் பிவிபி நிறுவனம் பிரம்மோற்சவம் திரைப்படத்தை அதிக செலவில் தயாரித்துள்ளது. இப்படத்திற்கென பிரம்மாண்ட படப்பிடிப்பு தளங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் இப்படத்தில் நாயகன் மகேஷ் பாபுவின் ஆடை அலங்காரத்திற்கு மட்டும் ரூ 1 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள்

கூறுகின்றன.இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மகேஷ் பாபு, இப்படத்தில் 100 ஆடைகளை மாற்றி அணிந்ததாகக் கூறினார். பொதுவாக திரைப்படங்களில் நாயகிகளின் உடை அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நிலையில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா மகேஷ் பாபுவின் உடைகளுக்கு அதிக செலவு செய்துள்ளார். கஷனம் எனும் படத்தை ரூ 1.10 கோடி செலவில் தயாரித்த பிவிபி நிறுவனம் ரூ 1 கோடியை உடை அலங்காரத்திற்கு மட்டும் செலவு செய்துள்ளது


Post Comment

Post Comment