செல்லப்பிராணிகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சில குறிப்புகள்!


Posted by-Kalki Teamகோடை தற்பொழுது தகிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நீங்கள் உங்களுடைய செல்லப்பிராணியுடன் சேர்ந்து கோடையை விரட்ட தயராகுங்கள். மனிதனின் சிறந்த நண்பனான நாய்களுக்கு இப்போது மற்றும் எப்பொழுதும் சிறிது சூரிய வெளிச்சம் தேவை. உங்கள் செல்லப்பிராணியின் முடி அதற்கு தொந்தரவாக உள்ளது என்றால், நீங்கள் ஒரு செல்லப்பிராணிக்கான ஸ்பாவிற்கு சென்று அதன் முடியை டிரிம் செய்ய உதவுங்கள்.

பூனைகள் கூட இந்த கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன. உங்கள் பூனை வெப்பத்தால் பாதிக்கப்பட்டால் அவைகளுக்காக ஒரு நீச்சல் மிதவையை உங்களால் வாங்கித் தர முடியும். அந்த மிதவையில் அவைகள் ஒய்வெடுப்பதை நீங்கள் ரசித்துப் பாருங்கள்.

மேலே கூறிய இந்தச் சிறு குறிப்புகளுடன் நாங்கள் இன்னும் சில குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். அவைகளைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய செல்லப்பிராணியை கோடை வெப்பத்தில் இருந்து காக்க முடியும். எனவே, நீங்கள் ஏன் காத்திருக்கிறார்கள்? தமிழ் போல்ட் ஸ்கை வழங்கும் குறிப்புகளை தொடர்ந்து பாருங்கள். இந்த எளிய குறிப்புகள் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது உங்கள் செல்லப்பிராணிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

சாப்பிட என்ன கொடுக்கலாம்:

தங்கள் செல்லப்பிராணியின் உடல் நிலையை உன்னிப்பாக கவனிப்பது அதனுடைய உரிமையாளரின் மிக முக்கிய கடமை. கோடை காலத்தில் ஒரு நிறைந்த மற்றும் சத்தான உணவை உங்களுடைய செல்லப் பிராணிக்கு வழங்குவது மிகவும் நல்லது. தர்பூசணி, மோர் மற்றும் இளநீர் போன்ற குளிர்ச்சி தரும் உணவை உங்களின் செல்லப்பிராணிக்குத் தாருங்கள். தயிர் ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா நிறைந்த உணவாகும். எனவே அதை சாதம் மற்றும் இறைச்சி துண்டுகளுடன் சேர்த்து கொடுங்கள்.

செல்லப் பிராணிகளின் முடியை சீர்ப்படுத்துங்கள்:

உங்கள் செல்லப்பிராணியின் முடியை ட்ரிம் செய்வது அவைகளை கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். உங்களுடைய செல்லப்பிராணியின் இனத்தை பொறுத்து, கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் படி உங்களுடைய வளர்ப்பு நாய்க்கு எவ்வுளவு முடி தேவைப்படும் என முடிவு செய்து அதற்கேற்ப ட்ரிம் செய்யவும்.

நீர்த்தேக்கத்திற்கு அவற்றைக் கூட்டிச் செல்லுங்கள்:

நீங்கள் வெப்பத்தை முறியடிக்க உங்களுடைய நாயை கோடை விடுமுறைக்கு எங்காவது குளிர்பிரதேசத்திற்கு கூட்டிச் செல்லுங்கள் அல்லது உங்களுடைய நகரத்தில் உள்ள செல்லப்பிராணிகளுக்கான ரிசார்ட் எதற்காவது கூட்டிச் செல்லுங்கள். மேற்கூறிய இரண்டு வழிகளிலும், நீங்கள் மற்றும் உங்கள் செல்லப்பிராணி கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியும் மற்றும் உங்களுடைய விடுமுறையை அனுபவிக்க முடியும்.

குடிக்க அதிக தண்ணீர் கொடுங்கள்:

உங்களைப் போன்றே உங்களுடைய செல்லப்பிராணிகளும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் செல்லம் நாள் முழுவதும் இங்கும் அங்கும் ஒடி விளையாடுகின்றது மற்றும் சுறுசுறுப்பாக இயங்குகின்றது எனில் அடிக்கடி தண்ணீர் அருந்தும் வண்ணம் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கவும்.

வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ள போது:

நிபுணர்கள், செல்லப்பிராணிகளை வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் போது நேரடியான சூரிய ஒளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று ஆலோசனை கூறுகின்றார்கள். நாய்களும் வெப்ப பக்கவாதம் மற்றும் பிற வெப்பம் தொடர்புடைய பிரச்சினைகளால் பாதிக்கப்படக்கூடும். எனவே அவைகளை ஒரு குளிர்ந்த தரையில், மின் விசிறிக்கு அடியில், வீட்டின் உள்ளே வைத்திருப்பது மிகவும் சிறந்தது.

பூனைக்கு கூட சலுகைகள் காட்டுங்கள்:

பூனைகள் நாய்கள் போல் இல்லாமல் சூரியனை நேசிக்கின்றன. எனினும் அவைகள் ஒரு நாளின் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே சூரியனை நேசிக்கின்றன. எனவே பூனைகள் ஒரு குளிர்ந்த இடத்தில் மிகவும் அமைதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவைகள் நீரின்றி வறண்டு விடாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருங்கள். மேலும் அவைகள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Post Comment

Post Comment